செமிகண்டக்டர் தட்டுப்பாடு மத்தியிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 83 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: இந்தியா நடப்பு நிதி ஆண்டில் ரூ.42,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற நிதி ஆண்டில் இந்தியா ரூ.23,000 கோடி அளவில்ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்தது.

பல்வேறு காரணங்களால் செமி கண்டக்டருக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி மிகப் பெரும் அளவில் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2017-18-ம் ஆண்டுநிதி ஆண்டில் ரூ.1300 கோடிஅளவில் இந்தியா ஸ்மார்ட்போன் களை ஏற்றுமதி செய்தது. ஆனால் அதற்கடுத்த 2018-19-ம்ஆண்டு அது ரூ.11,200 கோடியாகவும், 2019-20-ல் ரூ.27,200 கோடியாகவும் உயர்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
செமிகண்டக்டர் தட்டுப்பாடு மத்தியிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 83 சதவீதம் உயர்வு செமிகண்டக்டர் தட்டுப்பாடு மத்தியிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 83 சதவீதம் உயர்வு Reviewed by Meera jasmine on March 26, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.