தவறான தகவல்களை பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை

புதுடெல்லி: இந்தியாவின் தேசப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்.

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் 2021-இன் கீழ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது மத்திய அமைச்சகம். அதன்படி தவறான தகவல்களை பரப்பிய 22 யூடியூப் சார்ந்த செய்தி சேனல்கள், மூன்று ட்விட்டர் கணக்குகள், ஒரு ஃபேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி நிறுவனத்தின் வலைதளத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 22 யூடியூப் சேனல்களில் நான்கு பாகிஸ்தான் நாட்டு கணக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
தவறான தகவல்களை பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை தவறான தகவல்களை பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை Reviewed by Meera jasmine on April 05, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.