எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விலை குறைந்த பேட்டரி: சென்னை ஐஐடி ஆய்வுக் குழு தீவிர முயற்சி

புதுடெல்லி: மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக, இயந்திரக் கருவி மூலம் ரீசார்ஜ் செய்யக் கூடிய ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்கும் பணியை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: புதிய பேட்டரி தொழில்நுட்ப காப்புரிமைக்காக விண்ணப்பித்த ஆராய்ச்சியாளர்கள், ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்க பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில் இவை சிக்கனமானவை மட்டுமின்றி நீண்ட ஆயுட்காலம் கொண்டவையாகும். ஜிங்க்-ஏர் பேட்டரிகளை இரு சக்கர, மூன்று சக்கர மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விலை குறைந்த பேட்டரி: சென்னை ஐஐடி ஆய்வுக் குழு தீவிர முயற்சி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விலை குறைந்த பேட்டரி: சென்னை ஐஐடி ஆய்வுக் குழு தீவிர முயற்சி Reviewed by Meera jasmine on May 30, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.