யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களை மாதந்தோறும் 150 கோடிக்கும் மேலான பயனர்கள் பார்ப்பதாக தகவல்

சான் பிரான்சிஸ்கோ: யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தில் மாதந்தோறும் சுமார் 1.5 பில்லியன் (150 கோடி) எண்ணிக்கைக்கு மேலான பயனர்கள் வீடியோக்களை பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டிக்டாக் செயலி தடையை தொடர்ந்து கடந்த 2020 செப்டம்பர் வாக்கில் யூடியூப் ஷார்ட்ஸ் தளம் பீட்டா வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 2021 ஜூலையில் உலக அளவில் ஷார்ட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 15 முதல் 60 நொடிகள் வரையில் போர்ட்ரைட் மோடில் பயனர்கள் இதில் வீடியோக்களை பார்க்கலாம், பகிரலாம். ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தளம் எனவும் இதை சொல்லலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களை மாதந்தோறும் 150 கோடிக்கும் மேலான பயனர்கள் பார்ப்பதாக தகவல் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களை மாதந்தோறும் 150 கோடிக்கும் மேலான பயனர்கள் பார்ப்பதாக தகவல் Reviewed by Meera jasmine on June 16, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.