இந்திய அரசு முடக்கச் சொன்ன ட்வீட்களில் 50 - 60 சதவீதம் தீங்கற்றவை: ட்விட்டர் வாதம்

ஹைதராபாத்: இந்திய அரசு முடக்கச் சொன்ன ட்வீட்களில் 50 முதல் 60 சதவீதம் வரையிலான ட்வீட்கள் எந்தவித ஊறும் விளைவிக்காதவை என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் தளத்தில் சில கணக்குகள், யூ.ஆர்.எல் மற்றும் ட்வீட்களை நீக்குமாறு இந்திய அரசு சார்பில் ட்விட்டர் நிறுவனத்திடம் முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் தொடுத்த மனுவை நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) விசாரித்தது. அப்போது இதனை ட்விட்டர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கருத்துப் பதிவுகள் மற்றும் சிலரது பக்கங்களை நீக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் சில உத்தரவுகளுக்கு எதிராக சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் சார்பில் கடந்த ஜூலை வாக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் பேரில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
இந்திய அரசு முடக்கச் சொன்ன ட்வீட்களில் 50 - 60 சதவீதம் தீங்கற்றவை: ட்விட்டர் வாதம் இந்திய அரசு முடக்கச் சொன்ன ட்வீட்களில் 50 - 60 சதவீதம் தீங்கற்றவை: ட்விட்டர் வாதம் Reviewed by Meera jasmine on September 26, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.