‘எடிட் பட்டன்’ சோதனையில் ட்விட்டர்: கட்டண சந்தா அடிப்படையில் அறிமுகமாகும் அம்சம்

சான் பிரான்சிஸ்கோ: 280 கேரக்டரில் கருத்துகளை பகிர உதவுகிறது சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர். இதில் ஒரு முறை பதிவிட்ட ட்வீட்களை திருத்த (எடிட்) முடியாது. பிழை இருந்தால் டெலீட் (நீக்குவது) செய்வது மட்டுமே இப்போது இதன் பயனர்களுக்கு உள்ள ஒரே ஆப்ஷன். அதன் காரணமாக ட்வீட்களை திருத்தும் எடிட் பட்டன் ஆப்ஷன் வேண்டும் என்பது ட்விட்டர் தள பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இப்போது அந்த அம்சத்தை ட்விட்டர் சோதித்து வருகிறதாம்.

இந்த அம்சம் வரும் நாட்களில் கட்டண சந்தா அடிப்படையில் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது குறித்து ஒரு ட்வீட்டும் செய்துள்ளது ட்விட்டர். “நீங்கள் எடிட் செய்யப்பட்ட ட்வீட்டை பார்க்க நேர்ந்தால் அது நாங்கள் எடிட் பட்டனை சோதித்து வருவதால்தான். அதற்கான வேலை நடக்கிறது” என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
‘எடிட் பட்டன்’ சோதனையில் ட்விட்டர்: கட்டண சந்தா அடிப்படையில் அறிமுகமாகும் அம்சம் ‘எடிட் பட்டன்’ சோதனையில் ட்விட்டர்: கட்டண சந்தா அடிப்படையில் அறிமுகமாகும் அம்சம் Reviewed by Meera jasmine on September 01, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.