கலாம் கண்ட கடைசி கனவை நனவாக்குவோம்

ஒரு காலத்தில் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருந்தது. ஏவுகணை தொழில்நுட்ப பரவலைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அமைப்பான எம்.டி.சி.ஆர்.-ன் கெடுபிடியால் இந்தியாவுக்கு ஏவுகணை தொழில்நுட்பம், தளவாட உதவிகள் கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழலில் அப்துல் கலாம் தலைமையில் கடந்த 1983-ம் ஆண்டு, தேடித் தாக்கும் (Guided missiles) ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தை இந்தியா தொடங்கியது. கலாமின் வழிகாட்டுதலில் இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உள்நாட்டிலேயே தேடித் தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

கலாம் விதைத்த விதையால் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா இப்போது பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக நீண்ட தொலைவு சீறிப் பாயக்கூடிய ஏவுகணைகளுக்கான ரீ-என்ட்ரி தொழில்நுட்பத்தை உள்நாட்டில் உருவாக்கியது மிகப்பெரிய சாதனையாகும். அதாவது ரீ-என்ட்ரி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் பூமிக்கு மேலே பல நூறு கிலோ மீட்டர் பயணித்துவிட்டு பின்னர் வானில் இருந்து பூமி நோக்கி திரும்பி இலக்கை தாக்கி அழிக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
கலாம் கண்ட கடைசி கனவை நனவாக்குவோம் கலாம் கண்ட கடைசி கனவை நனவாக்குவோம் Reviewed by Meera jasmine on October 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.