வாட்ஸ்அப் முடக்கத்திற்கு காரணம் என்ன? - மெட்டாவிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு

புதுடெல்லி: உலக அளவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வாட்ஸ்அப் தளம் முடங்கியது. அதனால் அந்த தளத்தில் பயனர்களால் தொடர்பு மேற்கொள்ள முடியாமல் தவித்தனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் முடக்கத்திற்கான காரணம் குறித்து அதன் தாய் நிறுவனமான மெட்டா வசம் இந்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரப்பில் மெட்டாவை தொடர்பு கொண்டுள்ளது.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
வாட்ஸ்அப் முடக்கத்திற்கு காரணம் என்ன? - மெட்டாவிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு வாட்ஸ்அப் முடக்கத்திற்கு காரணம் என்ன? - மெட்டாவிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு Reviewed by Meera jasmine on October 27, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.