ட்விட்டர் ‘ஃப்ளு டிக்’ கட்டணம் குறித்த தகவலை நம்பவில்லை: மத்திய அமைச்சர்

புதுடெல்லி:பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி மாதக் கட்டணம் வசூலிக்க இருப்பதாக வரும் தகவலை நம்பவில்லை என்று மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் இறுதியில் சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். இருந்தாலும் இரு தரப்புக்குமான டீல் இழுபறியாக இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்ற நிலையில, ஒருவழியாக ட்விட்டர் உரிமை எலன் மஸ்க்கிடம் வந்துள்ளது. இந்தநிலையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார். பயனர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக் முறைக்கு கட்டணம் வசூலிக்கும் வழிமுறை குறித்து ஆராயுமாறு தனது ஊழியர்களுக்கு எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து ட்விட்டர் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
ட்விட்டர் ‘ஃப்ளு டிக்’ கட்டணம் குறித்த தகவலை நம்பவில்லை: மத்திய அமைச்சர் ட்விட்டர் ‘ஃப்ளு டிக்’ கட்டணம் குறித்த தகவலை நம்பவில்லை: மத்திய அமைச்சர் Reviewed by Meera jasmine on October 31, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.