ப்ளூடூத் மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச், கழுத்தோடு மாட்டப்படும் ப்ளூடூத் ஹெட்செட், ஒயர்லெஸ் ஏர்பாட், மவுஸ், ஸ்பீக்கர் என அதன் பட்டியல் நீள்கிறது. இருந்தாலும் இந்த ப்ளூடூத் டிவைஸ்கள் இப்போது ப்ளூடூத் மூலமாகவே ஹேக் செய்யப்பட்டு சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலிருந்து பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.
எளிய பயன்பாட்டுக்காக வயர்களுக்கு விமோசனம் கொடுக்கப்போன பயனர்கள் வில்லங்கத்திற்கு ஆளாக வேண்டிய நிலையை ப்ளூடூத் ஹேக்கிங் ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ப்ளூடூத் சாதனம் ஆன் செய்யப்பட்டுள்ள பயனர்களின் சாதனங்களை ஹேக்கர்கள் அக்செஸ் செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதன் வழியே செல்போன், லேப்டாப் போன்ற பயனர்களின் சாதனங்களை ப்ளூடூத் ஊடாக ஹேக் செய்து, அதில் உள்ள மிக முக்கிய தரவுகளை களவாட வாய்ப்பு உள்ளதாம். சமயங்களில் முழுவதுமாக அந்த சாதனத்தை ஹேக்கர்களால் கட்டுப்படுத்தவும் முடியும் என தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
No comments: