டெல்லி: உலகின் மலிவு விலை 5ஜி சந்தையாக இந்திய நாடு திகழும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி20 தொடர்பான நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதன் காரணமாக உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக அவர் திகழ்கிறார். இப்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
உலகின் மலிவு விலை 5ஜி சந்தையாக இந்தியா திகழும்: பில் கேட்ஸ் புகழாரம்
Reviewed by Meera jasmine
on
March 03, 2023
Rating:
No comments: