கொலை வழக்கில் ஜாமீன் கேட்ட குற்றவாளி: சாட் ஜிபிடி உதவியை நாடிய பஞ்சாப் நீதிமன்றம்!

சண்டிகர்: கொலை வழக்கில் கைதான குற்றவாளியின் ஜாமீன் மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி அனுப் சித்கரா, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாட் ஜிபிடி-யின் உதவியை நாடியுள்ளார். அதுவும் குற்றவாளிக்கு இந்த வழக்கின் சாரம்சத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாமீன் வழங்கலாமா என நீதிபதி சாட் ஜிபிடியில் வினவியுள்ளார். இந்திய நீதித்துறையில் இது முதல் முறை எனத் தெரிகிறது.

கடந்த 2020-ல் ஜஸ்வி என்ற ஜஸ்விந்தர் சிங், லூதியானாவில் உள்ள சிம்லாபுரி காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். அவரும், அவரது கூட்டாளிகளும் சில மீது நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதுதான் அவர் மீதான குற்றம். அவரது ஜாமீன் மனுவை பஞ்சாப் அரசு தரப்பு எதிர்த்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
கொலை வழக்கில் ஜாமீன் கேட்ட குற்றவாளி: சாட் ஜிபிடி உதவியை நாடிய பஞ்சாப் நீதிமன்றம்! கொலை வழக்கில் ஜாமீன் கேட்ட குற்றவாளி: சாட் ஜிபிடி உதவியை நாடிய பஞ்சாப் நீதிமன்றம்! Reviewed by Meera jasmine on March 28, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.