2 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் கூகுள்

கலிபோர்னியா: கூகுள் கணக்கு வைத்துள்ள பயனர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவற்றை நீக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. ‘இன்-ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ்’ சார்ந்த கொள்கை முடிவில் கூகுள் தரப்பில் மேற்கொண்டுள்ள மாற்றம் இதற்கு காரணம் என தெரிகிறது.

இதன் மூலம் பயனர்கள் தங்கள் கூகுள் கணக்குகளை 24 மாதத்திற்கு ஒரு முறையேனும் லாக்-இன் செய்து ரிவ்யூ செய்ய வேண்டும். அதை செய்யாத பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என தெரிகிறது. இதற்கு முன்னர் இன்-ஆக்டிவாக இருக்கும் பயனர் கணக்குகளில் இருக்கும் டேட்டாவை (தரவுகள்) மட்டுமே கூகுள் நீக்கி வந்தது. இப்போது கணக்கையே மொத்தமாக நீக்க உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
2 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் கூகுள் 2 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் கூகுள் Reviewed by Meera jasmine on May 17, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.