கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் அகற்றம்

சென்னை: ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சட்டவிரோதமாக போலி கடன் செயலிகளை உருவாக்கி, அவற்றின்வாயிலாக கடன் கொடுத்து, கொடுத்த பணத்தைவிட அதிகதொகை கேட்டு வாடிக்கையாளர்களை மிரட்டுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டன.

மேலும், வாடிக்கையாளர் குறித்த காலத்துக்குள் பணத்தை திரும்பச் செலுத்தாவிட்டால், அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அவர்களது உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டல் விடுப்பதாகவும் குற்றாச்சாட்டுகள் எழுந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றன. இந்நிலையில், சட்டவிரோத கடன் செயலிகளை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸார் கடிதம் எழுதி இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் அகற்றம் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் அகற்றம் Reviewed by Meera jasmine on May 05, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.