உலகின் முதல் சோடியம் பேட்டரி: சாதனை முயற்சியில் மதுரை லாரி ஓட்டுநரின் மகள்

மதுரை: தூங்கா நகரமான மதுரை சினிமாவுக்கும், ஆன்மிக, கலாச்சார திருவிழாக்களுக்கு மட்டுமே அடையாளம் காட்டப்படுகிறது. மதுரையில் வசிக்கும் எளிய மக்களின் சாதனைகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. மதுரையில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவரான சுபத்ரா தனது படிப்பால் புதிய கண்டுபிடிப்பின் வெற்றி இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ராஜேந்திரன் மகள்தான் சுபத்ரா. தனது படிப்பு மூலம் இஸ்ரோவில் 2005-2006-ம் ஆண்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு செயல்முறை வடிவமைப்பின் பொறியியல் பிரிவில் சுபத்ரா விஞ்ஞானியாகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர், துபாய், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் ஆசியா, ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். புதிய கண்டுபிடிப்பால் சாதிக்க வேண்டும் என இலக்குடன் அப்பணியில் இருந்து விலகினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
உலகின் முதல் சோடியம் பேட்டரி: சாதனை முயற்சியில் மதுரை லாரி ஓட்டுநரின் மகள் உலகின் முதல் சோடியம் பேட்டரி: சாதனை முயற்சியில் மதுரை லாரி ஓட்டுநரின் மகள் Reviewed by Meera jasmine on June 08, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.