AI சூழ் உலகு 5 | ஏஐ வாத்தியின் வருகை - கையருகே ‘டிஜிட்டல் சமத்துவம்’ கிட்டும் காலம்!

கல்வித் துறையில் தொழில்நுட்ப புரட்சியின் வீச்சை கரோனா தொற்று பரவலுக்கு முன், அதற்குப் பின் என இரண்டு வகையாக பிரிக்க முடியும். கரோனா காரணமாக டிஜிட்டல் வழியில் ஆன்லைனில் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது அதிகரித்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் வகுப்பறையில் இருந்த கரும்பலகைகள் ஸ்மார்ட் போர்டுகளாக உருமாறின. அப்படியே அது டிஜிட்டல் சாதனங்களுக்கு பயணித்துள்ளது. இந்தச் சூழலில் கல்வியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் பங்கினால் கற்றலின் அணுகலை அடுத்தக்கட்டத்துக்கு மேம்படுத்தி, அனைவருக்கும் அதற்கான அக்சஸை சமச்சீராக கிடைக்கும் காலமாக மாற்றியுள்ளது டெக் யுகம்.

பள்ளிக் கல்வியில் தொடங்கி பல்கலைக்கழகம் வரையில் என பல்வேறு கல்வி சார்ந்த அமைப்புகளில் ஏஐ சாட்பாட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாட்கள் தனக்கு உள்ள செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்தி பயனர்களுடன் கதைத்து வருகின்றன. ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் தனித்துவ முறையில் கல்வி பயில்விப்பது இதன் மூலம் சாத்தியமாகி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
AI சூழ் உலகு 5 | ஏஐ வாத்தியின் வருகை - கையருகே ‘டிஜிட்டல் சமத்துவம்’ கிட்டும் காலம்! AI சூழ் உலகு 5 | ஏஐ வாத்தியின் வருகை - கையருகே ‘டிஜிட்டல் சமத்துவம்’ கிட்டும் காலம்! Reviewed by Meera jasmine on August 30, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.