AI சூழ் உலகு 11 | யுத்தக் களத்தில் ‘ஏஐ’ உறுதுணையால் மனிதகுலத்துக்கு ஆக்கமா, அழிவா?

‘யுத்தம்’ இல்லாத உலகம் வேண்டுமென சாமானிய மனிதர் ஒவ்வொருவரும் விரும்புவர். ஆனாலும் மண், பொன் என வளங்களை சுரண்டவும், பிரிவினையின் பெயராலும், ஆட்சி அதிகாரத்தினாலும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் யுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதி காலம் முதலே யுத்தம் குறித்த தகவல்களை இலக்கியங்களின் ஊடாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் காலத்துக்கு ஏற்ற வகையில் யுத்த முறை மாற்றம் கண்டுள்ளது. உலக நாடுகளில் அரங்கேறும் போர்களும் அந்த வலி மிகுந்த வரலாற்றை சுட்டிக் காட்டுகிறது. மொத்தத்தில், தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப யுத்தமும் அப்டேட் காண்பது எதிர்மறை விளைவு.

அலெக்சாண்டர் வாள் ஏந்தியும், ஹிட்லரின் நாஜி படை குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்களை தெறிக்கவிட்டும் யுத்தம் புரிந்த காலம் மலையேறி மொபைல் போன் கேமில் வருவது போல பாராகிளைடரில் ஆகாய மார்க்கமாக அந்நிய நாட்டு எல்லைக்குள் பறந்து வந்து குண்டு வீசும் அல்லது கணைகளை ஏவும் வீடியோ காட்சிகள் அதற்கு உதாரணம். காலாட்படை, குதிரைப்படை காலமெல்லாம் வரலாறாக மாறிவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
AI சூழ் உலகு 11 | யுத்தக் களத்தில் ‘ஏஐ’ உறுதுணையால் மனிதகுலத்துக்கு ஆக்கமா, அழிவா? AI சூழ் உலகு 11 | யுத்தக் களத்தில் ‘ஏஐ’ உறுதுணையால் மனிதகுலத்துக்கு ஆக்கமா, அழிவா? Reviewed by Meera jasmine on October 13, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.