புதுடெல்லி: பிற நாடுகள் ஒரு தலைமுறை காலத்தில் அடையும் வளர்ச்சியை இந்தியா, தொழில்நுட்பத்தின் உதவியுடன் கடந்த 9-10 ஆண்டுகளில் அடைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டுக்கான சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 12-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். கவர்ந்திழுக்கும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்து லிங்க்டுஇன் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ''செயற்கை நுண்ணறிவு மற்றும் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றங்களைக் கொண்டாடும் ஒரு கவர்ச்சிகரமான நிகழ்ச்சியான செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும் அழைக்க விரும்புகிறேன்! உச்சி மாநாடு டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது. துடிப்பான இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
No comments: