இநதயவல பயனபடடகக வநத மடடவன தரடஸ: டவனலட சயவத மதல அமசஙகள வர!

ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு மாற்று என மெட்டாவின் ‘த்ரெட்ஸ்’ தளம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ட்விட்டர் தளத்தில் எண்ணற்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 4 மணி நேரத்தில் சுமார் 5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளதாக மார்க் ஸூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் தளத்தை அடிப்படையாக வைத்து த்ரெட்ஸ் இயங்குகிறது. பயனர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஏற்கனவே வெரிஃபை செய்யப்பட்ட பயனர்களுக்கு இதில் ப்ளூ டிக்கும் வழங்கப்படுகிறது. இதன் அம்சங்கள் அப்படியே ட்விட்டரை நகல் எடுத்தது போல உள்ளன. முன்னதாக, அமெரிக்காவில் 6-ம் தேதியும் (இன்று), உலக அளவில் 7-ம் தேதியும் (நாளை) த்ரெட்ஸ் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ட்விட்டருக்கு சவால் கொடுக்கும் விதமாக முன்கூட்டியே அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உலக அளவிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதாவது ஈஸ்டர்ன் டைம் நேரப்படி ஜூலை 6, காலை 10 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருந்தது. ஆனால், ஈஸ்டர்ன் டைம் நேரப்படி ஜூலை 5, மாலை 7 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
இநதயவல பயனபடடகக வநத மடடவன தரடஸ: டவனலட சயவத மதல அமசஙகள வர! இநதயவல பயனபடடகக வநத மடடவன தரடஸ: டவனலட சயவத மதல அமசஙகள வர! Reviewed by Meera jasmine on July 06, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.